வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உள்ளூர் உற்பத்திகளின் விற்பனைக் கண்காட்சி ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று (01) வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் குறித்த நிகழ்விற்காக உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை கூடங்கள் நிறுவப்பட்டு விற்பனையும் கண்காட்சியும் பெற்று வருகிறது.
உள்ளூர் உற்பத்திகளின் விற்பனைக் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண சிறு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவிக்க யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் நிரந்தர விற்பனைத் தொகுதி விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும், அத்தோடு உள்ளூர் சிறு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும் பல்வேறு வேலை திட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.