கடற்தொழில் மற்றும் விவசாயிகளின் நன்மை கருதியும், வறுமைக் கோட்டிற்கு உட்பட்டோரின் நிலை கருதியும் மண்ணெண்ணை இன் விலையை 50/= ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்க்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய இது வரை 355 ரூவாவிற்கு விற்கப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டு இனி 305 ரூபாவிற்கு விற்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த விலை திருத்தம் இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் அதேவேளை, ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.