Home தாயக செய்திகள் அரசாங்கத்தை கண்டித்து 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மட்டக்களப்பில் போராட்டம்:

அரசாங்கத்தை கண்டித்து 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மட்டக்களப்பில் போராட்டம்:

15
0

ரணில் தலைமையிலான புதிய அரசின் புதிய வரிக்கொள்கை, மின்சாரக்கட்டண அதிகரிப்பு, போக்குவரத்து கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் மற்றும் உணவுப்பொருட்களின் விலையேற்றம் என்பவற்றை எதிர்த்து இன்று மார்ச் 01 முதல் பணிப் புறக்கணிப்பு மற்றும் பாரிய போராட்டங்களுக்கு தொழிற்சங்கங்கள் அறிவிப்பு விடுத்திருந்த நிலையில் அதற்கு ஆதரவாக மட்டக்களப்பில் சற்று முன்னர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் அமைந்துள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலளார்கள் நினைவுத்தூபி அருகே இன்று கூடிய இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற பலர் கறுப்பு நிற உடை அணிந்தும், கறுப்பு நிற கொடிகளை கைகளில் தாங்கிய வாறூம் அரசாங்கத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு நின்றதோடு, இன்றைய போராட்டம் ஓர் எச்சரிக்கை போராட்டமே என்றும், அரசாங்கம் உடனடியாக தீர்வை தராவிட்டால் தொடர் போராட்டத்தில் இறங்குவோம் என்றும் ஆவேசமாக குரல் எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.