Home செய்திகள் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்:

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்:

17
0

தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று(26) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

கொழும்பு இப்பன்வல சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்களினால் சுமார் 20 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

இந்த போராட்டத்திற்கு எதிராக கோட்டை பொலிஸாரும் மருதானை பொலிஸாரும் இணைந்து இரண்டு நீதிமன்ற உத்தரவுகளை ஏற்கனவே பெற்றிருந்த நிலையில், இன்று பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டு வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையாலேயே அவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியதாக எமது பொலிஸார் தெரிவித்தனர்.