Home தாயக செய்திகள் தென்னிலங்கையில் இருந்து வடமாகாண சபைக்கு 1100 சிங்கள ஊழியர்களை நியமிக்க திட்டம்!

தென்னிலங்கையில் இருந்து வடமாகாண சபைக்கு 1100 சிங்கள ஊழியர்களை நியமிக்க திட்டம்!

19
0

வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்காக தென்பகுதியிலிருந்து 1100 சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்றுள்ளதாகவும், விரைவில் கோரிக்கை கடிதம் வடக்கு மாகாணத்திலிருந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த முயற்சியில் வடமாகாணா ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் முன்னின்று செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றிக் காணப்படுகின்ற நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்களவரை இங்கு நியமிக்க முயற்சிக்கப்படுகின்றமை மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலங்களில் வாக்குரிமைக்காக தம்மிடம் வரும் இவர்கள் அதிகாரம் கிடைத்தத்தும் ஆட்சியாளர் பக்கம் நின்று தமிழர் நலனுக்கு எதிராகவும், தமிழர் நில அபகரிப்பு, தமிழர் உரிமை மறுப்பு என்பவற்றிற்கு சிங்கள பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்து விடுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.