கடந்த ஆண்டு மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிய அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை விசாரணைக்கு உட்படுத்துமாறு அட்மிரல் வசந்த கர்னகொட தலைமையிலான மூவரடங்கிய குழு பரிந்துரைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வசந்த கர்னகொட தலைமையில் தயா ரத்நாயக்க மற்றும் ரொஷான் குணதிலக்க ஆகிய மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையிலேயே மேற்படி பரிந்துரைக்கப்பட்டு நேற்று (25) வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த இறுதி பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பில் விசாரணை நடத்துமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களதிற்கு இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.