Home செய்திகள் இரவோடு இரவாக நிலாவரை பகுதியில் அரசமரத்துக்கு கீழே முளைத்த புத்தர் சிலை!

இரவோடு இரவாக நிலாவரை பகுதியில் அரசமரத்துக்கு கீழே முளைத்த புத்தர் சிலை!

20
0

யாழ்ப்பாணம் – நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இன்று காலை இனங்காணப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் தொடர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை எவ்வாறு இராணுவத்தினருக்கு தெரியாமல் அங்கு வைக்கப்பட்டத்து என்ற சந்தேகம் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நின்ற இராணுவத்தினரே அதனை அமைத்ததாகத் தெரிவிக்கப்பட்டு அங்கு கூடிய மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து குறித்த சிலை இராணுவத்தினரால் தற்போது எடுத்து செல்லப்பட்டது.