Home செய்திகள் வடமாகாண ஊடகவியலாளர்கள் 18 பேருக்கு யாழில் கெளரவிப்பு!

வடமாகாண ஊடகவியலாளர்கள் 18 பேருக்கு யாழில் கெளரவிப்பு!

13
0

வட மாகாணத்தில் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக மனிதநேயத்தோடும் அர்ப்பணிப்போடும் தமது கடமைகளை நேரகாலம் பாராது செய்துவரும் ஊடகவியலாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின்  தேசிய அமைப்பாளர் சுப்பிரமணியம்  அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், 18 தமிழ் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.