Home செய்திகள் மார்ச் முதல் வாரத்தில் 8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் இலங்கையை தாக்கலாம் என எச்சரிக்கை!

மார்ச் முதல் வாரத்தில் 8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் இலங்கையை தாக்கலாம் என எச்சரிக்கை!

16
0

இந்தியாவின் வடபகுதியில் எதிர்வரும் வாரத்தில் 8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அவ்வாறான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டால் இலங்கையில் கொழும்பிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்தார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வடக்கே ஏற்பட்ட 5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் கொழும்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதை மறக்கமுடியாது எனவும், அதைவிட வலுவாக தற்போது 8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருக்கும் நிலையில் கூடுதல் அவதானத்துடன் அரசாங்கம் செயற்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.