Home உலக செய்திகள் உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்தியரின் பெயர் பரிந்துரை:

உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்தியரின் பெயர் பரிந்துரை:

22
0

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அமெரிக்க குடியுரிமை கொண்ட இந்தியரான அஜய் பங்காவை அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

மாஸ்டர் கார்டு நிறுவனத்தை பல ஆண்டுகள் தலைமை தாங்கி வழி நடத்தியவரே இந்த அஜய் பங்கா என்பதோடு, தற்போது இவர் தனியார் பங்கு நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஆவர்.

அஜய் பங்காவின் பெயரை ஜோ பைடன் பரிந்துரைத்தாலும், உலக வங்கியின் அடுத்த தலைவரை அதிகாரப்பூர்வமாக நியமிப்பது என்பது வங்கியின் நிர்வாகத்திற்கு உட்பட்டது என்ற நிலையில், மே மாத தொடக்கத்தில் புதிய தலைவரின் பெயரை உலக வங்கி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.