
தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைப்பு செய்வோம். சிறு துளி பெரு வெள்ளம் ஆகட்டும் எனக் கூறி யாழ்ப்பாணத்திலிருந்து இளைஞன் ஒருவன் 110/= ரூபா கட்டணம் செலுத்தி காசுக்கட்டளை மூலம் சிறு தொகை பணத்தினை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் நடிகர் விஜய் ஒரு படத்தில் இந்தியாவின் கடனை அடைக்க நாட்டுமக்கள் முன்வந்தாலே போதும் என கூறு முன்னுதாரணமாக சிறு தொகை பணம் ஒன்றினை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்திருப்பார். அது மக்கள் மத்தியில் பரவி மக்களும் தங்களால் ஆன பணத்தினை அனுப்பிவைக்க குடியரசுத் தலைவரே பாராட்டுக்களை தெரிவிப்பதாக அத் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அதே போல் தற்போது இலங்கையில் நிதி இல்லை என காரணம் காட்டி தேர்தலை நடாத்தாமல் தமது ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள நடாத்தப்படும் நாடகத்தை முடிவிற்கு கொண்டுவரவும், நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டி மக்களின் வாக்குரிமையோடு ஆட்சி அமைக்கப்படவும் இந்த இளைஞனின் செயல் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் வசிக்கும் இ.தயாளன் எனும் இளைஞனே இவ்வாறு 500/= ரூபா பணத்தினை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பி எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இது விளம்பரத்திற்காகவா…. அல்லது உண்ஐயாகவே உணர்வின் வெளிப்பாடா என்பது தெரியாதா போதும், இன்றைய சூழலில் இவ்வாறு அனைத்து மக்களும் முன்வந்து தம்மால் முடிந்த பணத்தினை தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கி தேர்தலை நடாத்த வற்புறுத்த வேண்டும்.
நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுவது மட்டும் மக்கள் வேலை அல்ல. நாடு சிக்கலை எதிர்கொள்ளும் போது அதன் உண்மை தன்மையை உணர்ந்து அந்த தருணத்தில் உதவுவதன் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயர்க்கும் எனில் அதிலும் துணீந்து உரிமையோடு பங்கேற்கும் மக்களூக்கே நாட்டின் எல்லா உரிமையும் உண்டு.