யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச இன்று(23) மதியம் அனலைதீவுக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதோடு, அங்கு இடம்பெற்ற அரசியல் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
அது மட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்சிகளிலும் கலந்து கொண்டுள்ள அவர் அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

