
களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தினால் கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 4 பிக்குகள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.