உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு வலியுறுத்தும் வகையில் பெருந்தொகையான மக்களின் பங்கேற்புடன் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று(20) முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரிணயின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘வாக்குரிமையை காப்பாற்ற கொழும்பில் திரள்வோம்’,
‘ஜனநாயகத்தை காப்பாற்ற கொழும்பில் திரள்வோம்’
என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியாவறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.