
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி சற்றுமுன் காலமானர் எனும் செய்தி தென்னிந்திய தமிழ் திரையுலகில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தாவணிக்கனவுகள் திரைப்படம் மூலம் 1984 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் அறிமுகமான நடிகர் மயில்சாமி நூற்றிற்கும் மேற்பட்ட படங்களில் சிறந்த நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னை போரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் மயில்சாமி சிகிச்சை பலனின்றி இன்று(19) இவ்வுலகை விட்டு விடைபெற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
57 வயதான நடிகர் மயில்சாமி அவர்கள் அண்மையில் நடந்துமுடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் விருகம்பாக்கத்தில் சுயேட்சையாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.