
உள்ளூராட்சிசபை தேர்தலை நடாத்த ஜனாதிபதி ரணில் விடுத்த அறிவிற்பிற்கமைய தேர்தல் திணைக்கழத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில் அரசாங்க அதிபர் பணிமனையூடாக இடம்பெற்றுவந்த தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்திவைக்குமாறு தேர்தல் ஆணையகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை திறைசேரி வழங்க மறுத்தமையே தேர்தல் பிற்போக முதன்மைக்காரணம் என தெரிவிக்கப்படும் நிலையில் அது மட்டுமன்றி அதனால் அரச அச்சகத்தினால் வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளமை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் போதுமானளவு எரிபொருள் வழங்கப்படாமை, பொலிஸ் திணைக்களத்தினால் அரச அச்சகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்கள் காரணமாகவே தேர்தலை நடாத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
தேர்தலை நடாத்த போவதாகவும், இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்போவதாகவும் வெளியில் கூறிக்கொண்டு உள்ளே மஹிந்த குழாமுடன் கூடி தேர்தலை நடாத்தமுடியாதவாறு தடைகளையும், தாமதங்களையும் ஏற்படுத்தியும், இனப்பிரச்சனை தீர்வு வழங்குவதற்கு எதிராக போராட்டங்களை கட்டவிழ்த்து விட்டும் நாடகமாடிய ஜனாதிபதி ரணிலின் தந்திரம் வெளிப்பட்டுள்ளதாக பல மட்டங்களில் கூறப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், தேர்தல் ஆணைக்குழு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.