தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் தலைமையில் சட்டத்தரணி மணிவண்ணன் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும், வேட்பாளர்களும் சர்வ மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி ஆசிகளை பெற்றுள்ளனர்.
அதற்கு முன்னதாக நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு சென்று மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நெல்லை ஆதீன குறும் முதல்வர் மற்றும் சிவகுரு முதல்வர் உட்பட யாழ் ஆயர் மற்றும் முஸ்லீம் மௌளபி ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியதோடு ஆசிகளையும் பெற்றனர்.