Home முக்கிய செய்திகள் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் நிலையில் இலங்கை: ஜேர்மனியின் தூதுவர்

ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் நிலையில் இலங்கை: ஜேர்மனியின் தூதுவர்

18
0

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றாததன் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என   இலங்கைக்கான ஜேர்மனியின்  தூதுவர் ஹோல்கெர் சியுபேர்ட் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஜேர்மனிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் வாக்குறுதியளித்துள்ள போதிலும் அதனை செய்யத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜேர்மனியின்  தூதுவர் ஹோல்கெர் சியுபேர்ட், ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இந்த கட்டம் முடிவிற்கு வருவதாகவும், இதன் காரணமாக இலங்கை அதனை இழக்கும் ஆபத்துள்ளது எனவும் தெரிவித்தார்.