இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் உள்ளடங்கிய “சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம்” நாளை (20) திங்கட்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
490 மில்லியன் ரூபா செலவில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இச் சுற்றுலா மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல நாட்டு பறவைகள் உள்ளதோடு, விலங்கியல் மாணவர்களுக்கான கல்வி பயிற்சி நிலையம், பறவை காப்பகம், பறவைகள் தங்குமிடம் மற்றும் ஒரு தனிமைப்படுத்தல் பிரிவு என்பனவும் உள்ளன.
இந்த “சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம்” வரும் 23ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.