
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டியில் நாளை(19) குடியரசு பெரஹரா இடம்பெறவுள்ளது.
இதுவே இலங்கையில் இடம்பெறும் ஐந்தாவது (5) குடியரசு பெரஹரா என்பதோடு 34 ஆண்டு இடைவெளியின் பின்னர் இடம்பெறும் பெரஹரா என்பதும், இலங்கையின் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் 1875 இல் இலங்கையில் முதலாவது குடியரசு பெரஹரா இடம்பெற்ற பின், பிரிட்டிஸ் ஆட்சியாளர்களினால் இலங்கை 1948 இலங்கையர்களிடம்(சிங்கள தலைமையின் கையில்) சுதந்திர நாடாக ஒப்படைக்கப்பட்ட பின்னர் 1954, 1981 மற்றும் 1987ஆம் ஆண்டுகளில் குடியரசு பெரஹராவை இலங்கை கண்டிருந்தது.
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடாத்த நிதி இல்லை என நிதி அமைச்சு கைவிரித்துள்ள நிலையிலும், அண்மையில் பெரும் செலவில் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நடாத்தப்பட்டிருந்ததும், அதன் பின்னர் நாளை மிகப்பெருந்திகஒ நிதியில் கண்டியில் இந்த குடியரசு பெரஹரா நடைபெற உள்ளமையும் இலங்கை ஆட்சியாளர்களின் மனோ நிலையையும், ஆதிக்கத்தையும் காட்டுவதாகவே அமைந்துள்ளது.