Home உலக செய்திகள் பல்கேரியாவில் – டிரக் ஒன்றில் இருந்து 18 சடலங்கள் மீட்பு!

பல்கேரியாவில் – டிரக் ஒன்றில் இருந்து 18 சடலங்கள் மீட்பு!

33
0

பல்கேரியாவில் – சோபியா அருகே கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட டிரக் ஒன்றில் இருந்து 18 சடலங்கள் மீட்பட்ட நிலையில், அதில் பயணித்த அனைவரும் ஆப்கானிஸ்தான் புலம்பெயர் மக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மரக்கட்டைகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தியுள்ள குறித்த டிரக்கின் ரகசிய பகுதியில் 40 பேர்கள் கொண்ட புலம்பெயர் மக்களின் குழு ஒன்று ஒளிந்திருந்துள்ளதாக பொலிசார் முன்னெடுத்த சோதனையின் போது தெரியவந்துள்ளது.

இதில் 18 பேர்கள் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களை மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், அதில் 8 பேர்களின் நிலை ஆபத்து கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.