Home செய்திகள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மாரடைப்பால் காலமானார்!

துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மாரடைப்பால் காலமானார்!

22
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் நேற்று (17) மாலை மாரடைப்பால் காலமானார்.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் அவர்கள் 2019 ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் மென்போக்கை கடைப்பிடிப்பதாக அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடாதிபதியாகவும் பதவிவகித்திருந்த இவர் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் கணிதத்துறை பேராசிரியராகவும் பணியாற்றியவர் என்பதோடு, துணைவேந்தராக பணியாற்றிய காலங்களில் மட்டுமன்றி தனது பொது வாழ்விலும் குறிப்பிடத்தக்க தமிழ்த் தேசிய காரியங்களை செய்தவர் என்பது பலருக்கு தெரியாத ஒன்றே.

தமிழ் பற்றும், இன உணர்வும் மிக்க இவர் குடும்ப வறுமையை தாண்டி கடின உழைப்பின் மூலம் வாழ்வில் முன்னேறி சாதித்து காட்டிய ஓர் பெருமனிதராக இன்று எம்மை விட்டு பிரிந்துள்ளார்.