Home செய்திகள் நாவற்குழியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு!

நாவற்குழியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு!

25
0

யாழ். நாவற்குழி எரிபொருள் நிலையத்தில் க்யூ ஆர்.கோட் இல்லாமல் பெற்றோல் வழங்க மறுத்த ஊழியர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் க்யூ.ஆர்.கோட் இல்லாமல் பெற்றோல் வழங்குமாறு வற்புறுத்திய போது பெற்றோல் வழங்க மறுத்த ஊழியர் மீதே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் வாளால் வெட்டியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் CCTV பதிவுகளை எடுத்துக்கொண்டதோடு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.