
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொதுநூலகத்தின் பெயரை மாற்றம் செய்வதாகக் கூறி, இன முரண்பாட்டை தோற்றுவிக்க சில அரசியல் தரப்புக்கள் விளைவதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு குறித்த பொதுநூலக விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.