Home செய்திகள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் – வன்முறைகளை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது என...

இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் – வன்முறைகளை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது என டக்ளஸ் தெரிவிப்பு:

20
0

இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறல்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ், இருப்பினும் எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை  அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலேயே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.