Home செய்திகள் அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் நன்னீர் மீன் வளர்ப்பாளர்களுக்கு 28ஆயிரம் மீன் குஞ்சுகள் வழங்கிவைப்பு:

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் நன்னீர் மீன் வளர்ப்பாளர்களுக்கு 28ஆயிரம் மீன் குஞ்சுகள் வழங்கிவைப்பு:

14
0

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஊடாக மூன்று நன்னீர் மீன் வளர்ப்பாளர்களுக்கு “நன்னீர் தடாக மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ்” 28ஆயிரம் மீன் குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டத்து.

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு விரிவாக்கல் திட்ட அலுவகம் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிபபாளர் அனோஜா உஷாந் நீரியல் வள உத்தியோகத்தர் அபராஜீதன் அபிவிருத்தி உத்தியோகத்தர் லோகிதன் மற்றும் அம்பாறை மாட்ட மீன் பிடித் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஆலோசனைக்கு அமைவாக பிரதேச செயலக கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ரவீந்திரனின் ஒழுங்கமைப்பில் விநாயகபுரம் பாலக்குடா பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.