
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டன.
ரெலோ கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி முதல்வர் து.ஈசன், புளொட்டைச் சேர்ந்த பி.தர்சானந், சு.சுபாதீஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எஸ். சாந்தரூபனும் கூட்டத்துக்குச் சமூகமளிக்கவில்லை.
வரவு செலவுத் திட்டத்தையே நிறைவேற்றமுடியாதவர் என முன்னாள் முதல்வர் மணிவண்ணனை கேலி செய்த ஆனோல்ட்டினாலும் அதை செய்யமுடியாமல் போயுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.