Home செய்திகள் தேர்தலை நடாத்துவதில் சிக்கல்: தேர்தல் ஆணைக்குழு

தேர்தலை நடாத்துவதில் சிக்கல்: தேர்தல் ஆணைக்குழு

19
0

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கான தொகையை தேர்தல் ஆணைக்குழு திறைசேரிக்கு வழங்காததால் குறித்த தேதியில் தேர்தலை நடாத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்காக 77 கோடி ரூபாயை இந்த மாதத்தில் விடுவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியிருந்த நிலையில், 10 கோடி ரூபாயையே தேர்தல் ஆணைக்குழுவுக்கு திறைசேரி விடுவித்துள்ளதாகவும் இதனாலேயே இச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை தேர்தலுக்கு ஒத்துழைப்பு தராத நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றை நாடுவோம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.