டில்லி, மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட 246-கிமீ டெல்லி-தௌசா-லால்சோட் எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் மோடி நேற்று (பிப்.,12) திறந்து வைத்தார்.
40 நகரங்கள் வழியாக பயணிக்கிறது.*இந்த சாலையானது பிரதமரின் கதி சக்தி பொருளாதார முனையங்கள், துறைமுகங்கள், 8 முக்கிய விமான நிலையங்கள், 8 தளவாட பூங்காக்கள், ஜீவர் விமான நிலையம், நவி மும்பை விமான நிலையம் என பசுமை விமான நிலையங்களையும் இணைக்கிறது.
இந்தியாவின் நீண்ட எக்ஸ்பிரஸ் சாலையான இதன் மொத்த நீளம் 1,386 கி.மீ ஆகும். இந்த சாலை மூலம் டில்லி மும்பை இடையிலான தூரம் 12 சதவீதம் குறைவதுடன், பயண நேரமும் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் ஆக குறையும் என சொல்லப்படுகிறது.
அங்கு பிரதமர் மோடி பேசுகையில்,
போக்குவரத்து வசதிகளால் முன்னேற்றம் வேகமடையும். நவீனசாலைகள், ரயில், விமானநிலையம் கட்டப்படும் போது நாட்டின் முன்னேற்றம் வேகப்பெறும். டில்லி- மும்பை எக்ஸ்பிரஸ் சாலை நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.நடப்பு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு ரூ 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டை விட தற்போது 5 மடங்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்றார்.