துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகின்ற நிலையில் இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதில் துருக்கியில் மட்டும் 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
அந்த இரு நாடுகளிலும் கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
