Home செய்திகள் படகு கவிழ்ந்து ஆசிரியர் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி!

படகு கவிழ்ந்து ஆசிரியர் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி!

19
0

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் பொயிருந்த நால்வரது சடலங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

4 மாணவர்கள், 7 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்கள் உள்ளடங்கலாக 14 பேர் பயணித்த படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட குறித்த விபத்தில் 10 பேர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ள நிலையில் ஒரு ஆசிரியரும், 3 மாணவ்ர்களுமாக நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை சோகத்தில் ஆழ்தியுள்ளது.

27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.