Home உலக செய்திகள் ஈகைப்பேரொளி முருகதாசனின் 14 ஆம் ஆண்டு நினைவ தினம் இங்கிலாந்தில் அனுஷ்டிப்பு!

ஈகைப்பேரொளி முருகதாசனின் 14 ஆம் ஆண்டு நினைவ தினம் இங்கிலாந்தில் அனுஷ்டிப்பு!

72
0

இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் மீது பெளத்த சிங்கள பேரினவாத அரச படைகளால் நடாத்தப்பட்ட கொடிய போத்த் தாக்குதல்களை தடுக்கக் கோரியும், அனியாயமாக படுகொலை செய்யப்படும் மக்களை காக்க கோரியும் சர்வதேசத்தின் கவனத்தை இலங்கைத் தீவில் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்த தமிழின அழிப்பின் பால் திருப்பும் முகமாகவும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் தீக்குழித்து தன்னுயிரை தமிழின விடுதலைக்கு ஆகுதியாக்கிய தியாகி ஈகைப்பேரொளி முருகதாசனின் 14ம் ஆண்டு நினைவு  நாளான இன்று (12-02-2023) பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமேற்கு லண்டன் – ஹெண்டன் பகுதியில் அமைந்துள்ள அவரது வித்துடல் விதைக்கப்பட்ட இடத்தில் நிறுவப்பட்ட அவரதும், 22 தியாகிகள் ஞாபகார்த்த நினைவு தூபியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

காலை 10:15 மணிக்கு ஆரம்பமான குறித்த நிகழ்வில் பொதுச்சுடரினை தேசிய செயற்பாட்டாளரான திரு. முருகானந்தம் அவர்கள் ஏற்றிவைக்க பின்னர ஈகைச் சுடரினை முருகதாசனின் சகோதரி ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து ஈகைப்பேரொளி முருகதாசனுக்கான மலர்மாலையினை முருகதாசனின் பெற்றோர் அணிவித்தனர். 

அதன் பின்னர் 22 ஈகியர்களுக்குமான நினைவு தூபிக்கான சுடரினை இளையோர்களில் ஒருவரான அன்பு அவர்கள் ஏற்றிவைக்க, மலர்மாலையினை நாம்தமிழர் கட்சியின் பிரித்தானியக் கிளை உறுப்பினர் திரு.நாதன் அவர்கள் அணிவித்தார். 

அரசியல் ஆய்வாளர் திரு.திபாகரன் அவர்கள் மலர்வணக்கத்தை செலுத்தி மலரஞ்சலியை தொடக்கிவைக்க அங்கு கூடியிருந்த மக்கள் வரிசைக்கிரமமாக சென்று தியாகிகளுக்கு சுடரேற்றி, மலர் தூவி தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

இளையோர் சார்பில் அன்பு அவர்களின் சிறு நினைவுரையும், வீரத்தமிழர் முன்னணியைச் சேர்ந்த திரு.கேசவன் அவர்களின் நினைவுரைகளும் இடம்பெற்று இறுதியில் உறுதியேற்போடு நிகழ்வுகள் நிறைவுகண்டது.