Home செய்திகள் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பெண்கள் வாழ்வுரிமைச்சங்கத்தினால் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு:

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பெண்கள் வாழ்வுரிமைச்சங்கத்தினால் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு:

24
0

மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுள் 25 குடும்பங்களுக்கு, தலா ஒரு குடும்பத்திற்கு 10000 பெறுமதியான உலருணவு பொருட்களை கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்கத்தினால் னேற்று வழங்கிவைக்கப்பட்டது.

அனிஞ்சியன்குளம் பொது நோக்கு மண்டபத்தில் கண்காணிப்பு மற்றும் மீளாய்வு உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமை சங்க இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் மற்றும் முல்லைத்தீவு பெண்கள் அபிவிருத்தி நிலைய இணைப்பாளர் திருமதி விஜயருபன் கமலினி அவர்களும் கிராம அலுவலர் , கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.