Home செய்திகள் திருக்கோணேஸ்வர திருத்தலத்தையும், அதன் சுற்றாடலையும் ஆக்கிரமிப்பில் இருந்தும், அழிவுகளிலிருந்தும் பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்: ஆறுதிருமுருகன்

திருக்கோணேஸ்வர திருத்தலத்தையும், அதன் சுற்றாடலையும் ஆக்கிரமிப்பில் இருந்தும், அழிவுகளிலிருந்தும் பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்: ஆறுதிருமுருகன்

26
0

கிழக்கு மாகாணத்திலும் இந்தியத்துணைத்தூதுவராயலம் அமைக்கப்படவேண்டும் எனவும், நீண்ட நெடுங்கால வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை இந்திய அரசாங்கம் பொறுப்பேற்று அதனைப் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் எனவும் அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்

இந்துக்களின் புனித ஸ்தலமாக காணப்படுகின்ற திருக்கோனேஸ்வரம் இன்னும் கடல் படையின் கட்டுப்பாட்டுக்குள்ளும்  தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலும் இருப்பதனால் திருக்கோனேஸ்வர ஆலயத்தை சுதந்திரத்தை பரிபாலனம் செய்ய முடியாத வகையில் தத்தளிக்கின்றார்கள். திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணியை இந்திய அரசாங்கம் பொறுப்போற்று செய்தது போல அதேபோன்று திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணியும் பெறுப்போற்றுச் செய்யப்படவேண்டும். 

இது தொடர்பாக நாங்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளோம் இந்திய உயர்ஸ்தானிகர் திருக்கோணேஸ்வரம் சென்று எல்லாவற்றையும் பார்வையிட்டு செல்கின்றார்.

ஆலயத்திற்கு சமீபமாக தற்போது முறையற்ற வகையில தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களால் பெட்டிக் கடைகள் அமைக்கப்பட்டு கோவில் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்கள் நிரந்தரக் கடைகள் அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதையும் இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரமருக்கும் நாம் அறிவித்திருந்தோம்.

இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தபோதும் இது வரை நிரந்தரமான தீர்வு காணப்படவில்லை.

எனவே மிக நீண்ட வரலாறு கொண்ட திருக்கோணேஸ்வர திருத்தலத்தையும், அதன் சுற்றாடலையும் ஆக்கிரமிப்பில் இருந்தும், அழிவுகளிலிருந்தும் பாதுகாப்பதற்கு அனைவரும் முயற்சி எடுக்கவேண்டும். குறிப்பாக இந்திய அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் அமைக்கப்படவேண்டும் என பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை அமைக்கப்படவில்லை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் இந்தியாவிற்கு தல யாத்திரை செல்வது என்றாலே மருத்துவத்திற்கு செல்வதாலேலே உயர் கல்விக்காக இந்தியா செல்வதென்றாலே பயண அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள கொழும்புக்கே செல்லவே;ண்டியுள்ளது இதனால் பல கஸ்ரங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

எனவே இந்திய துணைத்தூதுவராலயம் கிழக்கு மாகாணத்தில் அமைக்கவேண்டும்  இதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கிழக்கு மக்கள் சார்பாக வேண்டிக்கொள்கின்றோம். இதற்கு இந்திய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.