Home முக்கிய செய்திகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய மீன்வள அமைச்சர் அடங்கிய குழு!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய மீன்வள அமைச்சர் அடங்கிய குழு!

29
0

இந்தியாவின் ,மீன்வள மத்திய இணை அமைச்சர் அடங்கிய குழு இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட இந்திய அரசின் உயர்மட்ட  குழுவே இன்று வருகைதந்தவர்களாவர்.

யாழ்  இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர் ,கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்  தலைமையிலான அதிகாரிகள் இந்திய உயர்மட்ட குழுவினை மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி  வரவேற்றனர்.

இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும்  நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.