Home செய்திகள் நான் கட்சியில் இருந்து வெளியேறவில்லை – போலியான பரப்புரைகளை நம்பவேண்டாம்:

நான் கட்சியில் இருந்து வெளியேறவில்லை – போலியான பரப்புரைகளை நம்பவேண்டாம்:

17
0

நான் சில நபர்களோடு முரண்பட்டு தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறி விட்டேன் என்கின்ற போலியான செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் கி.சேயோன் தெரிவித்தார்.

மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் சேயோன் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான் தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறியதாகவும் அதில் சில அவர்களுடன் முரண்பட்டு விட்டதாகவும் ஒரு போலியான பரப்புரை முகநூல் வாயிலாகவும் சில ஊடகங்கள் மூலமும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது அதை நான் முற்றாக மறுக்கின்றேன்.

நாங்கள் பாரம்பரிய கட்சி ஒன்றில் இருப்பவர்கள் கட்சி என்கின்ற வகையில் பல கருத்து முரண்பாடுகள் வருவது இயல்பான விடயம் ஆனால் இந்த கட்சியினுடைய நிலைப்பாடுகள் தொடர்பாக இந்த செய்தி தொடர்பாக நான் கூறுகின்ற விடயம் என்னவென்றால் கட்சியினுடைய மறுசீரமைப்பு தொடர்பாக பல விடயங்களை பேசி இருக்கின்றேன் அது தொடர்பாக ஒரு கடிதமும் நான் தலைமைக்கு அனுப்பி இருந்தேன்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் நான் இளைஞரணி பதவியில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றேன் என்ற செய்தியைத்தான் கூறியிருந்தேன்.

அது திரிவடைந்து நான் தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறி விட்டேன் அத்தோடு சில நபர்களோடு முரண்பட்டு அதன் காரணமாக வெளியேறுகின்றேன் என்கின்ற போலியான செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நான் எந்த இடத்திலும் தமிழரசு கட்சியை குறிப்பாக இந்த தமிழர்களுடைய விடுதலை சார்ந்து, தமிழ் தேசியத்தின் விடுதலை சார்ந்து பயணிக்கின்ற இந்த கட்சியில் இருந்து வெளியேறுவேன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை கட்சியினுடைய உறுப்புரிமையில் நான் என்றும் இருப்பேன்.

நான் துண்டு பிரசுரம் விநியோகித்த அந்த நாளில் இருந்து படிப்படியாக முன்னேறி நான் ஒரு தலைவர் என்ற அடிப்படையிலேயே தான் வந்திருக்கின்றேன் நான் அங்கு ஒரு கட்சி இங்கு ஒரு கட்சியுமாக இருக்கவில்லை ஆகவே இதுதான் என்னுடைய நிலைப்பாடு.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுடன் நான் முரண்பட்டதாகவும் அதிலிருந்து கட்சியிலிருந்து நான் வெளியேறியதாகவும் போலியான செய்திகளை அரசியல் இன்பம் கண்டு கொண்டிருக்கின்றார்கள்.

எனக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் எதுவிதமான முரண்பாடுகளும் இல்லை சுமூகமான ஒரு உறவு இருக்கின்றது அவர் அவர்களுடைய கடமையை செய்து கொண்டு இருக்கிறார் ஆகவே இந்த விடயங்களை ஒரு அரசியல் இன்பம் காண்பதற்காக இதை பரப்புபவர்கள் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் என்பதனை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் உடைய அந்த ஆட்சி அதிகாரத்தினுடைய மாற்றங்கள் செய்வதற்காக கணிசமான காலங்கள் எனக்கு அதன் கடமை ஆற்ற வேண்டிய கடப்பாடு இருந்தது அதன் அடிப்படையில் நாங்கள் இன்று கோரளைபற்று வாழைச்சேனை பிரதேச சபையை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியிலிருந்து வீழ்த்தியிருக்கின்றோம் முற்றுமுழுதாக அந்த பிரதேசமே தமிழரசு கட்சியின் உடைய ஏகோபித்த ஆதரவோடு இருக்கின்றது அதன்காரணமாக.

ஏற்கனவே நான் கூறி இருந்தேன் இந்த வாலிபர் முன்னணி குறிப்பாக கட்சியினுடைய மறுசீரமைப்பு தொடர்பான பல விடயங்களை முன்னிட்டுகரமாக நான் கட்சி தலைமைக்கும் குறிப்பிட்ட தலைமைகள் சார்ந்த அவர்களுக்கும் தெளிவாக தெரியப்படுத்தி இருக்கின்றேன்.

எங்களுடைய கட்சி சார்ந்த விடயம் கட்சியினுடைய முன்னேற்றம் சார்ந்த விடயம் நானும் ஆழமாக என்னுடைய கட்சியை நேசிப்பவன் என்ற வகையில் கட்சிக்கு ஆனந்த விடயங்களை தெரியப்படுத்தி இருக்கின்றேன் நிச்சயமாக அது நிறைவேற்றப்படுகின்ற பட்சத்தில் அடுத்த கட்டத்திற்கு வேகமாக கட்சி முன்னேருவதற்கான செயற்பாடாக இருக்கும் அந்த செயல்பாடுகளை நான் இப்போது சொல்லுவது பொருத்தம் இல்லை என நினைக்கின்றேன் காலம் வருகின்றபோது நிச்சயமாக கூறுவேன் என தெரிவித்தார்.