இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமைக்காக ஜனாதிபதி ரணிலுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது.
நேற்று (4) சனிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இந்திய வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் இவ்வாறு பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.