Home தாயக செய்திகள் பனை மரங்களை வெட்டி அழிப்பதற்கு இடமளிக்க முடியாது: வடமாகான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

பனை மரங்களை வெட்டி அழிப்பதற்கு இடமளிக்க முடியாது: வடமாகான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

19
0

பனை மரங்கள் என்பது வடமாகாண மக்களின் வாழ்வதாரத்துக்கான ஒரு பயிராகக் காணப்படுகின்ற நிலையில் அவற்றை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

பனை மரங்களை வெட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அவர் மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

75 வருடங்களை ஆயுட்காலமாக கொண்ட “பனைமரம்” வடமாகாண மக்களின் வாழ்வதாரத்துக்கான ஒரு பயிராகக் காணப்படும் நிலையில் பனை மரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இது தொடர்பில், பனை மரங்களின் பாதுகாப்பு தொடர்பில் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா உள்ளிட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், இதை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளும், அதிகளவான நஸ்ட ஈடும் அறவிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.