Home செய்திகள் கிராமப் புறங்களில் உள்ள மக்களின் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க புதிதாக 150 பேரூந்துகள்!

கிராமப் புறங்களில் உள்ள மக்களின் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க புதிதாக 150 பேரூந்துகள்!

28
0

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேரூந்துகளில், 50 பேரூந்துகளை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (05) முற்பகல் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே அடையாள ரீதியிலாக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

நாடாக்களை வெட்டி இரண்டு பஸ்களையும் திறந்து வைத்த ஜனாதிபதி ரணில் பேரூந்துகளையும் பார்வையிட்டார்.

இலங்கையின் கிராமப் புறங்களில் உள்ள மக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு புதிதாக 150 பேரூந்துகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபையினால் இன்று(05) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்துகள் இந்திய நிதி உதவி திட்டத்தின் கீழ் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார்.