
இலங்கையின் 75வது சுதந்திர தினமான இன்று சிங்கள ஆட்சியாளர்களால் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளிலிருந்து 622 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பிற்கு அமைவாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்தும் 7 ஆண் கைதிகளும் 1 பெண் கைதியும் மொத்தமாக 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு இன்று விடுதலையானவர்களில் ஒருவர் கூட அரசியல் கைதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.