இலங்கையின் 75வது சுதந்திர தினத்தின நிகழ்வின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம் பெற்றது.
அரசாங்கத்தின் பணிப்பிற்கமைய அரச ஊழியர்களை உள்ளடக்கி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவர்கள் மற்றும் படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம் பெற்று மும்மத தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது.
மாவட்ட மட்ட சுதந்திர தினநிகழ்வில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் என சிலர் கலந்து கொண்டிருந்த போதும் பெருமளவான இருக்கைகள் காலியாகவும், மைதானமும், மைதானத்தை சுற்றியுள்ல சூழலும் களை இழந்து வெறிச்சோடிக்கிடந்தமையை காணமுடிந்தது.