Home செய்திகள் இலங்கையின் சுதந்திர தினத்திலும் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள்!

இலங்கையின் சுதந்திர தினத்திலும் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள்!

42
0

இலங்கையின் சுதந்திர தினமான இன்று இலங்கை அரசாங்கமும், சிங்கள பெளத்த பேரினவாதிகளும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள அதே தருணத்தில் இலங்கையில் சுதந்திரம் இல்லை, வாழ வழியில்லை என கூறி தமிழகத்தில் 4 இலங்கை அகதிகள் இன்று காலை தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவை சேர்ந்த  ஜெய பரமேஸ்வரன் (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரே நேற்று (3) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு நள்ளிரவு சென்றடைந்துள்ளனர்.

தகவலறிந்து தனுஷ்கோடி ஒத்தப்படடிக்கு இன்று (04) அதிகாலை சென்ற தனுஷ்கோடி பொலிஸார் மற்றும் க்யூ பிரிவு  பொலிஸார் இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ வழி இல்லை என்ற நிலையில் , தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் சந்தோஷமாக வாழ்வதையும் அவர்களது குழந்தைகள் நன்கு படிக்கும் வீடியோ பார்த்து குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு குடும்பத்துடன் புகலிடம் தேடி வந்ததாக தெரிவித்ததாக தனுஷ்கோடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்ப்ற்றுவரும் இன்றைய நாளில் நடைபெற்றுள்ளமையால் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு சர்வதேச மட்டத்தில் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.