Home உலக செய்திகள் தமிழகத்தில் இலங்கை பெண்ணின் துணிகரச் செயல்!

தமிழகத்தில் இலங்கை பெண்ணின் துணிகரச் செயல்!

28
0

தமிழகத்தின் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த ஹரினா என்ற இளம்பெண், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பில் குறித்த பெண்ணிற்கு இந்திய கடவுச்சீட்டு வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கில், கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த ஹரினா ஆகிய எனது பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். அவர்கள் உள்நாட்டு போர் நடைபெற்ற போது தமிழகத்துக்கு அகதிகளாக வந்தார்கள்.

நான் கரூர் கோடாங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 2002-ம் ஆண்டு பிறந்தேன். பள்ளிப்படிப்பை கரூரிலும், கோவையில் கல்லூரி படிப்பையும் முடித்தேன்.

தற்போது வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளேன். இதனால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் நான் இந்திய குடிமகள் இல்லை என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பாஸ்போர்ட் சட்டப்பிரிவு 20-ல் இந்திய குடிமகனாக இல்லாதவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து கூறப்பட்டு உள்ளது. அதில், பொதுநலன் கருதி மத்திய அரசு நினைத்தால், இந்திய குடிமகனாக இல்லாதவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கலாம்.

ஆகவே, மனுதாரர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து உள்ளார். எனவே மனுதாரருக்கு பாஸ்போர்ட் சட்டம் 1967 பிரிவு 20-ன் கீழ் பாஸ்போர்ட் வழங்க வேண்டும். மனுதாரர் மீண்டும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரது விண்ணப்பத்தை மத்திய உள்துறை செயலாளர் பரிசீலித்து உத்தரவளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.