எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர வைபவத்தில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளாராம்.
நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பணத்தை விரயம் செய்யும் சந்தர்ப்பங்களில் பங்குபற்ற வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கமையவே சஜித் பிரேமதாச இந்த முடிவை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.