
திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
வயது முதிர்வு, உடல் உபாதைகளால் வெளி நடமாட்டங்கள், சந்திப்புக்கள் என்பவற்றை தவிர்த்துவந்த இரா.சம்பந்தன் அவர்கள் கடந்த சில வாரங்களாக கட்சிக்குள் நடைபெறும் இளுபறிகள், பிரிவுகள் என்பவற்றால் மன உழைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.