Home செய்திகள் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்:

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்:

18
0

2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைப்பதற்கும், அதற்கான வரைவு சட்டமூலத்தை தயாரிப்பதற்கும், சட்ட வரைவுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தின் கீழ், வரி விதிக்கக்கூடிய நபர்களுக்கு 2.5 வீதம் சமூகப் பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள், சிறப்புத் தேவைகள் கொண்ட நபர்களின் பயன்பாட்டிற்கான ஒட்டோ மொபைல் மற்றும் உபகரணங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளன.