
ஊடகவியலாளர் நிட்சிங்கம் நிபோஜன் இன்று தெகிவளையில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று (30) மாலை 5.30 அளவில் தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்திலிருந்து வீழ்ந்தே இவர் உயிரிழந்துள்ளார். இதனால் இவர் தவறி வீழ்ந்தாரா…? அல்லது பின்னிருந்து யாரேனும் இவரை தள்ளி வீழ்த்தி மரணத்தை ஏற்படுத்தினரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டுவந்தவராவார். இவரின் உடலம் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், நாளைய தினம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.