யாழ்ப்பாணம் – இளவாலை பெரியவளான் பகுதியில் கம்பியால் தாக்கப்பட்டு 29 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிரோஜன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்தப் படுகொலை தொடர்பில் இருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் வீதியில் சென்று கொண்டிருந்த போது, போதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த இருவர் இவருடன் தகராறு செய்து, தகராறு கைகலப்பாக மாறி, குறித்த நபரை கம்பியால் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் அயலவர்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும் 20 வயதுடைய இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.