உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அச்சுப் பிழைகள், வாக்குச் சீட்டு திருத்தங்கள் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் சரிபார்த்து, அதன் துல்லியத்தை தேர்தல் ஆணைக்குழு மீள் ஆய்வு செய்து, அச்சிடுதல் தொடர்பான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படுமென தெரிவித்த அரச அச்சக மாஅதிபர் கங்கானி லியனகே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான ஏனைய ஆவணங்களை அச்சிடும் பணி முன்னதாக அரசாங்க அச்சக திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அடுத்த வாரம் நடைபெற உள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.