Home செய்திகள் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்துக்கு எவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டது என்பதை சபாநாயகர் தெளிவுப்படுத்த வேண்டும்:...

பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்துக்கு எவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டது என்பதை சபாநாயகர் தெளிவுப்படுத்த வேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல

24
0

பாராளுமன்றத்தை ஒத்திவைத்தமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில்;

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பை ஏற்றதன் பின்னர் கடந்த ஏழு மாதங்களில் இரண்டு தடவைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளார்.

பாராளுமன்றத்தை ஒத்திவைத்தால் அடுத்ததாக என்ன நடக்கும். பாராளுமன்றத்தின் சகல குழுக்களும் இரத்து செய்யப்படும். அதேபோன்று குறித்த குழுக்கள் ஆரம்பித்த விசாரணைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

பாராளுமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் காணப்படுகின்றன. குறித்த அனைத்து குழுக்களும் இரத்து செய்யப்படும். குறித்த குழுக்கள் முன்னெடுத்து வந்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

எதற்காக இவ்வாறான ஒரு தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்தார் என்று தெரியவில்லை.

பிரித்தானிய சம்பிரதாயத்துக்கு அமைவாக, பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு முன்பாக சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட வேண்டியது அவசியம்.

எனினும் தற்போதைய சந்தர்ப்பத்தில் அவ்வாறான எந்த கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை. அவர் தன்னிச்சையாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்.

இந்த தீர்மானத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான காரணம் என்ன என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம்.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்துக்கு எவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டது என்பதை சபாநாயகர் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.